கம்பராமாயணம் 187 · பால 5.19

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எங்கும், நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
பொங்கும் மூவுலகையும் புடைத்து அழித்தனர்;
செம் கண் நாயக! இனித் தீர்த்தல் இல்லை ஏல்,
நுங்குவர் உலகை, ஓர் நொடியின் ' என்றனர்.

பொருள் · Meaning in Tamil

எங்கள் நீள்வரங்களால் - எங்களுடைய மிகுந்த வரபலத்தால்; அரக்கர் என்றுளார் பொங்கு மூவுலகையும் புடைத்தழித்தனர் - அரக்கர் என்னும் கொடியவர்கள் வளர்ந்தோங்கிய மூவுலகத்துயிர்களையும், பொருது கொன்றனர்; செங்கண்மால் நாயக - அழகிய கண்களையுடைய தலைவனே!; இனித்தீர்த்தல் இல்லையேல் - இனி, இவ்வரக்கர்களின் கொடிய செயலைத் தீர்க்கவில்லையானால்; ஓர் நொடியில் உலகை நுங்குவர் என்றனர் - வெகுவிரைவில் உலகம் முழுவதையும் அழித்துவிடுவர் என்றார்கள்.

நீள்வரம்: நீண்ட வாழ்வையும், நிறைந்த வலிமையையும் தரும்வரம் என்பது பொருள் (பிரமனும், சிவனுமாகிய தேவர்கள் கொடுத்தவரம்) என்பதால் ‘எங்கள் நீள்வரம்’ என்றனர். புடைத்து அழித்தல்: அடித்துக் கொல்லுதல். நுங்குதல்: விழுங்குதல் என்பதும் ஒரு பொருளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Through the long boons that we ourselves gave, those who are called demons
  2. have struck and ravaged all three thriving worlds;
  3. red-eyed Lord! If you do not now put an end to them,
  4. in a moment they will swallow the world,' they said.

What the poem says

The gods admit their own part in the disaster. The demons' power comes from boons that the gods themselves, Brahmā and Śiva among them, granted: long life and great strength.

Now the demons are ravaging all three worlds, and without Viṣṇu's help they will soon devour everything.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṅkaḷ, nīḷ varaṅkaḷāl, arakkar eṉṟu uḷār,
poṅku mūulakaiyum puṭaittu aḻittaṉar;
ceṅ kaṇ nāyaka! iṉit tīrttal illaiyēl,
nuṅkuvar ulakai, ōr noṭiyil' eṉṟaṉar.