கம்பராமாயணம் 188 · பால 5.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும் - என்று கூறியவர்களான தேவர்கள் துன்பத்தால் வருந்தி, திருமாலைத் துதித்து வணங்கிடவும்; மன்றல் அம் துளவினான் - மணமும், அழகும் உடைய துழாய் மாலையணிந்த திருமால்; வருந்தல் வஞ்சகர்தம் தலை அறுத்து தாரணிக்கு இடர் தணிப்பென் - (அத்தேவர்களை நோக்கி) வருந்தாதீர்கள்! வஞ்சக அரக்கர்களின் தலைகளைத் துணித்து உலகத்தின் துன்பத்தைத் தணிப்பேன்; ஒன்று நீ கேண்ம் என உரைத்தல் மேயினான் - அதற்குரியதொன்றைக் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தான்.
மன்றல்: மிகுமணம். வருந்தல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள் எதிர் மறை. கேளும் என்பது கேண்ம் என வந்தது விகாரமும் சந்தியுமாம். ‘ம்’: மகரக் குறுக்கம். வஞ்சகர்: மாயத்தொழில் வல்லோர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When they had said this and, sunk in distress, bowed and praised him,
- he who wears the fragrant, lovely tulasi said: 'Do not grieve! I will cut off
- the heads of the deceivers and end the earth's suffering;
- but hear one thing from me,' and began to speak.
What the poem says
Viṣṇu reassures the gods. He will cut off the heads of the treacherous demons and free the world from its misery.
But first he has one instruction for them, which he gives in the next verse.