கம்பராமாயணம் 1872 · அயோத்தியா 4.190

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முழுக்கலின் வலிய நம் மூரி நெஞ்சினை
மழுக்களில் பிளத்தும் ' என்று ஓடுவார் , வழி
ஒழுக்கிய கண்ணினில் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர் .

பொருள் · Meaning in Tamil

சிலர் -; “முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை - பெரிய கல்லைப் போல வலியதாக உள்ள நமது கடு மனத்தை; மழுக்களின் பிளத்தும்” - கோடரியால் இரண்டாக்குவோம்;' என்று; ஓடுவார் - ஓடுகின்றார்கள்; வழி ஒழுக்கிய கண்ணின் நீர்க் கலுழி ஆற்றிடை - வழியில் ஒழுகவிடப்பட்ட கண்ணீராகிய கலங்கிய நீர்ப்பெருக்காகிய ஆற்றின்கண்; இழுக்கலில் - சேற்றில்; வழுக்கி வீழ்ந்து - சறுக்கி விழுந்து; இடர் உற்றார் - துன்பம் அடைந்தார்.

கலின் - கல்லின் என்பதன் விகாரம். மழு - கோடரி. ஓடுகின்றவர் தமது கண்ணீர் ஆற்றுச் சேற்றில் வழுக்கி, வீழ்ந்தார்கள் என்பதாம். இழுக்கல் - சேறு. “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்' என்னும் குறள் காண்க. (குறள். 415.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'These stubborn hearts of ours, harder than solid rock,
  2. we will split with axes!' cried some, and ran; and on the way,
  3. in the flood of muddy tears that streamed from their eyes,
  4. they slipped in the mire, fell, and came to grief.

What the poem says

Some people rush off, crying that they will split their stone-hard hearts with axes for having survived this sight. But they have shed so many tears on the road that the ground has turned to mud, and they slip and fall in it. The word for the slippery mud recalls a Tirukkuṟaḷ couplet that compares wise counsel to a walking stick on muddy ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muḻuk kaliṉ valiya nam mūri neñciṉai
maḻukkaḷiṉ piḷattum' eṉṟu ōṭuvār, vaḻi
oḻuṅkiya kaṇṇiṉ nīrk kaluḻi ūṟṟiṭai
iḻukkalil vaḻukki vīḻntu iṭar uṟṟār cilar.