கம்பராமாயணம் 1875 · அயோத்தியா 4.193

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்
பூ கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர் ,
ஏங்கிய குரலினர் , இணைந்த காந்தளில்
தாங்கிய செங்கை தம் தலைகள் மேல் உளார் .

பொருள் · Meaning in Tamil

வாங்கிய மருங்குலை - உள்வாங்கிய மெலிந்து வளையும் இடையை; வருத்தும் கொங்கையர் - தமது பாரத்தால் வருத்துகின்ற தனங்களை உடைய அழகிய மகளிர்; பூங்கொடி ஒதுங்குவபோல் ஒதுங்கினர் - மலர் பூத்த கொடி அசைவது போல் ஒதுங்கி; ஏங்கிய குரலினர் - அழுத குரல் உடையதாய்; இணைந்த காந்தளின் - இரட்டையான காந்தள் மலர்போல்; செங்கை - சிவந்த கையை; தம் தலையின் மேல் தாங்கிய உளார் - தம் தலைகளின் மேல் தாங்கியவராய் உள்ளனர். மகளிர் தம் தலைமீது கைவைத்து அழுதவண்ணம் உளர் என்றார். “கை தலையின்மீது உளார் பூங்கொடி ஒதுங்குவது போல் ஒதுங்கினர்' என முடிப்பினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Women whose breasts weighed on their slender, curving waists
  2. drew aside like flowering creepers swaying,
  3. their voices choked with sobs, holding their red hands
  4. upon their heads like paired glory lilies.

What the poem says

Some of the women step aside, swaying like flowering vines, sobbing, with both hands clasped on their heads in the posture of mourning. Their red joined hands look like a pair of red glory-lily blossoms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṅkiya maruṅkulai varuttum koṅkaiyar
pūṅkoṭi otuṅkuvapōl otuṅkiṉar,
ēṅkiya kuraliṉar, iṇainta kāntaḷiṉ
tāṅkiya ceṅ kai tam talaiyiṉmēl uḷār.