கம்பராமாயணம் 1877 · அயோத்தியா 4.195
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை - மேகம் போல அகிற் புகையானது சஞ்சரிக்கும் மாளிகையினது; எஞ்சல் இல் சாளரத்து - குறைதல் இல்லாத (காற்று வழங்கும்) பலகணி வழியாக (இராமனைக் கண்டு); இரங்கும் இன்சொலார் - வருந்தும் இனிய சொல்லினை உடைய மகளிர்; அஞ்சனக் கண்ணின் - மை தீட்டப் பெற்ற கண்ணிலிருந்து; நீர் அருவி சோர்தர - நீர் அருவியாக வழிய; பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் - கூட்டின்கண் இருந்து அழுகின்ற கிளியைப் போல; பன்னினார் - சொன்னதையே சொல்லிச் சொல்லிப் புலம்பினார்.
பலகணி வழியாகத் தலைகாட்டி அழும் மகளிர் கூட்டில் இருந்து அழும் கிளி போன்றனர் என்க. பன்னுதல் - திரும்பத் திரும்பச் சொல்லுதல், கிளி சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் ஆதலின் இங்கே பன்னுதலுக்கும் உவமையாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Sweet-voiced women grieving at the countless lattice windows
- of mansions where aloe-wood smoke drifted like cloud,
- as waterfalls of tears ran from their collyrium-darkened eyes,
- lamented over and over, like parrots weeping in a cage.
What the poem says
Other women watch from the lattice windows of mansions filled with fragrant aloe-wood smoke. Tears pour from their painted eyes, and they keep repeating the same laments. Framed in the windows, they look like caged parrots, and like parrots they say the same words again and again.