கம்பராமாயணம் 1879 · அயோத்தியா 4.197
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துக்கம் நின்று - துயரம் நிலைத்து நின்று; அறிவினைச் சூறையாட - அறிவைக் கொள்ளையிட்டுச் செல்ல (அதனால் உணர்வு மயங்கி); மாதர் - தாய்மார்கள்; மக்களை மறந்தனர் - தங்கள் பிள்ளைகளை மறந்துபோனார்கள்; புதல்வர் - பிள்ளைகள்; தாயரைப் புக்க இடம் அறிந்திலர் - தாய்மார்கள் புகுந்த இடத்தை அறியாதவர் ஆயினர்; பூசல் இட்டு - அழுது ஆர்ப்பரித்து; உக்கனர் - மனம் உடைந்து; உயங்கினர் - வாடி; உருகி - கரைந்து; சோர்ந்தனர் - சோர்வடைந்தார்கள்.
பிள்ளைகள் தாயரைத் தேடும் இயல்புடையவர் ஆதலின், தேடிக் கிடையாதவழி பூசல் இட்டு உயங்கி உருகினர் என்க. இதற்குக் காரணம் தாயர் பிள்ளைகளை மறந்தமையே. அவர்கள் துக்கம் நின்று அறிவு கொள்ளை போனதால் மறந்தனர் எனவே, இராமன் காடு புகுவது நகரமாந்தரைப் படுத்திய விதம் அறிவித்தவாறு. “ஏ” காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mothers forgot their children; the children
- did not know where their mothers had gone; they cried out,
- broke down, wilted, melted and grew faint,
- as grief stood fast and plundered all their wits.
What the poem says
Grief has robbed the city of its senses. Mothers forget their own children, and the children cannot find their mothers, so they cry and wilt and fall exhausted. The poet uses this to show how deeply Irāmaṉ's departure has disordered the life of Ayōtti.