கம்பராமாயணம் 1880 · அயோத்தியா 4.198
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காமரம் கனிந்து என - காமரம் என்னும் பண் முற்றிப் பழுத்தாற்போல; கனிந்த மென் மொழி - இனிய மென்மையான பேச்சினை உடைய; மா மடந்தையர் எலாம் - பெருமையுற்ற மகளிர் எல்லாரும்; மறுகு சேர்தலால் - வீதியை அடைந்தபடியால்; தவளமாடம் - வெண்ணிற மாளிகைகள்; தே மரு நறுங்குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்தன - தேன் பொருந்திய நறுமணம் வீசும் கூந்தலை உடைய திருமகளை விட்டுப் பிரிந்த தாமரைமலர்போல் ஆயின.
காமரம் என்பது பண் நிரம்பினாற் போன்ற பேச்சு. மகளிர் போனபடியால் வெறுமை அடைந்த மாளிகையைத் திருமகள் நீங்கிய தாமரைபோல் என்றார். தவளம் - வெண்மை. “திருப்புறக் கொடுத்த செம்பொன் தாமரை போன்று கோயில், புரிக்குழல் மடந்தை போகப் புலம்பொடு மடிந்த அன்றே” என்ற சிந்தாமணி (560) இங்கு ஒப்பு நோக்கற்குரியது. 'ஏ' காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because all the great ladies, whose soft speech was ripe
- as the kāmaram melody come to fullness, had gone out into the streets,
- the white mansions looked like lotuses
- abandoned by Tiru, goddess of the fragrant, honeyed hair.
What the poem says
All the women, whose voices are as sweet as a fully ripened melody, have left their homes for the streets. The empty white mansions now look like lotus flowers that the goddess of fortune, who dwells in the lotus, has deserted. A similar image of an empty palace appears in the Cīvakacintāmaṇi.