கம்பராமாயணம் 1882 · அயோத்தியா 4.200
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மனைக்குன்றம் - மனைகளாகிய மலைகளில்; கொடி அடங்கின - கொடிகள் அடங்கிப் போயின; கோ முரசு - அரச முரசம்; இடி அடங்கின - ஒலித்தல் இல்லாமற் போயின; பல் இயம் - பல வாத்தியங்கள்; முழக்கு இழந்த - ஒலியை இழந்தன; படி அடங்கலும் - பூமி முழுவதிலும்; மதில்புறத்து வீதி - மதிலின் புறம்பே உள்ள வீதிகள்; நிமிர்பசுங்கண் மாரியால் - பெருகுகின்ற கண்ணீர் மழையால்; பொடி அடங்கின - புழுதி அடங்கப் பெற்றன.
கொடி கட்டப்பெற்ற மாடங்கள் கொடி இன்றி இருத்தல் வாத்தியங்கள் ஒலியாமை முதலியன துயரச் சின்னங்களாம். அயோத்தியின் துயரத்தை உலகத்தின்மேல் ஏற்றிக் கூறியது உயர்வுநவிற்சியே; ஆயினும், உலகமே வேதனைப் படுதற்குரிய நிகழ்ச்சிதானே!
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the hill-like mansions the flags were lowered; the thunder
- of the royal drums fell still; the many instruments lost their sound;
- and over all the earth, from the rain of tears that rose from fresh eyes,
- the dust was laid in the streets outside the walls.
What the poem says
The city shows every sign of mourning: no flags fly from the tall houses, the royal drums are silent, and no music plays. Throughout the land so many tears are shed that the dust in the streets is settled as if by rain. To speak of the whole earth weeping is exaggeration, but the event deserves it.