கம்பராமாயணம் 1883 · அயோத்தியா 4.201
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அட்டிலும் புகை இழந்தன - சமையற்கட்டுகள் (சமைத்தல் இல்லாமையால்) புகையை இழந்தன; நெட்டிலும் - உயர்ந்த மேல் மாடங்கள்; அகில் புகை இழந்தன - (பெண்கள் கூந்தலைப் புகை செய்யாமையால்) அகில் புகைகளை இழந்தன; கிளி - கிளிகள்; பால் நிறைந்த வட்டிலும் இழந்தன - (ஊட்டுவார் இன்மையால்) பால்நிரம்பிய கிண்ணத்தை இழந்தன; மகளிர் சோர - தாய்மார்கள் துயரத்தால் சோர்ந்தபடியால்; மகவும் - பிள்ளைகளும்; கால் மணித் தொட்டிலும் இழந்தன - கால் உடைய மணிகள் அழுத்திச் செய்யப்பெற்ற தொட்டிலை இழந்தன.
துயர மிகுதியால் நகர் தொழில் மறந்தபடியைச் சொன்னார். நெடு(மை) + இல் - நெட்டில்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The kitchens lost their smoke; the tall mansions lost
- their aloe-wood smoke; the parrots lost their bowls
- brimming with milk; and as the women grew faint,
- the babies lost their footed, jewelled cradles.
What the poem says
Daily life in the city stops. No cooking fires smoke in the kitchens, and no aloe-wood smoke drifts from the upper rooms where women used to perfume their hair. No one fills the pet parrots' bowls with milk, and mothers too exhausted with grief leave their babies unrocked in their jewelled cradles.