கம்பராமாயணம் 1884 · அயோத்தியா 4.202

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒளி துறந்தன முகம் உயிர் துறந்தெனத்
துளி துறந்தன முகில் தொகையும் ; தூயவாம்
தளி துறந்தன பலி ; தான யானையும் ,
களி துறந்தன ; மலர்க் கள் உண் வண்டினே .

பொருள் · Meaning in Tamil

உயிர் துறந்தென - உயிர் போனார் போல; முகம் - எல்லோருடைய முகமும்; ஒளி துறந்தன - ஒளி மழுங்கின; முகில் தொகையும் - மேகக்கூட்டமும்; துளி துறந்தன - மழைத் துளி துளிர்த்தலைக் கைவிட்டன; பரி - குதிரைகள்; தூய நீர்த் தளி துறந்தன - தூய்மையான நீர்ச் சாலைகளை இழந்தன; தானயானையும் - மதப் பெருக்கையுடைய யானைகளும்; மலர்க் கள் உண் வண்டின் - மலரில் தேன் உண்ணும் வண்டைப் போல; களி துறந்தன - களித்தலைக் கை விட்டன. தளி - கூடம். வண்டுகள் தேன் உண்டால் களிக்கும். இங்கே வண்டுகள் களி துறந்தன என்றதால் இராமன் காடு ஏகும் துயரத்தால் மலர்களில் தேன் இல்லையாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if life had left them, faces gave up their glow;
  2. the massed clouds gave up their rain; the horses
  3. gave up their stalls of clean water; and the elephants in rut
  4. gave up their frenzy, like the bees that drink the honey of flowers.

What the poem says

Everything loses its natural vigour. Faces grow dull as if lifeless, the clouds hold back their rain, the horses neglect their watering places, and even the elephants in musth lose their wildness. So do the bees, which normally grow drunk on nectar; it is implied that even the flowers have no honey in this time of grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oḷi tuṟantaṉa mukam uyirtuṟanteṉa
tuḷi tuṟantaṉa mukil tokaiyum; tūya nīrt
taḷi tuṟantaṉa pari; tāṉa yāṉaiyum,
kaḷi tuṟantaṉa; malark kaḷ uṇ vaṇṭiṉē.