கம்பராமாயணம் 1885 · அயோத்தியா 4.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குடை - குடைகள்; நிழல் பிரிந்தன - நிழல் செய்தலைக் கைவிட்டன; நெடுங்கண் ஏழையர் குழல் - நீண்ட கண்ணை உடைய மகளிர் கூந்தல்கள்; மலர் பிரிந்தன - மலர் சூடுதலை விட்டன; குமரர்தாள் இணை கழல் பிரிந்தன - வீரர்களது அடிகள் கழல் அணிதலைக் கைவிட்டன; சினக் காமன் வாளியும் - கோபம் உடைய மன்மதனது மலர் அம்புகளும்; அழல் பிரிந்தன - காம வெப்பத்தை உண்டாக்குதலை ஒழித்தன; அன்றில் - (என்றும் பிரியாது ஒன்றியிருக்கும்) அன்றிற் பறவைகள்; துணை பிரிந்த - தம் துணையைப் பிரிந்து தனித்திருப்பவாயின.
இராமனது பிரிவு உயிரினங்கள் இன்பத்தை இழக்கச்செய்தபடி. யாரும் குடைபிடித்துச் செல்வது இல்லை ஆதலின் குடை நிழல் பிரிந்தன என்றார். யாரும் வேட்கை உற்றிலர் என்பதனை மன்மதன் வாளி வெப்பத்தை விட்டது என்பதால் உணர்த்தினார். 'ஏ' காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Parasols parted from their shade; the hair of long-eyed women
- parted from its flowers; the young warriors' feet
- parted from their anklets; the arrows of angry Kāmaṉ
- parted from their fire; and the aṉṟil birds parted from their mates.
What the poem says
Each line repeats 'parted from' to show pleasure vanishing from the city. No one carries a parasol, women wear no flowers in their hair, young men put off their warrior anklets, and the love god's arrows lose their heat, since no one feels desire. Even the aṉṟil birds, which in Tamil poetry never leave their mates, now stay apart.