கம்பராமாயணம் 1886 · அயோத்தியா 4.204
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புரவி - குதிரைகள்; தார் ஒலி நீத்தன - கழுத்திற் கட்டிய கிண்கிணிமாலையின் ஓசையைக் கைவிட்டன; தண்ணுமை - மத்தளம்; வார் ஒலி நீத்தன - வாரை இழுத்துக் கட்டலால் விளையும் ஓசையைக் கைவிட்டன; தெருவும் - வீதிகளும்; தெண்திரை நீர் ஒலி நீத்தன நீத்தம் போல - தெளிந்த அலை நீர் ஒலியை விட்ட கடல் போல; மழையின் - மேகம் போல; விம்முறும் தேர் ஒலி நீத்தன - ஒலிக்கின்ற தேர்களின் ஒலியை இழந்தன.
குதிரை ஓட்டுவாரில்லை, மத்தளம் அடிப்பார் இலர் தெருவில் தேர்கள் ஓடவில்லை என்றார். அலை ஒழிந்த கடல் தேரோசை இழந்த தெருவுக்கு உவமை ஆயிற்று. “ஏ' ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The horses lost the jingle of their neck-garlands; the drums
- lost the sound of their tightened thongs; and the streets
- lost the sound of chariots that rumbled like rain clouds,
- like the sea when it has lost the sound of its clear, breaking waves.
What the poem says
The city falls silent. No horses are ridden, so their bells do not jingle; no one beats the drums; no chariots thunder through the streets. The quiet streets are like an ocean whose waves have stopped breaking.