கம்பராமாயணம் 1887 · அயோத்தியா 4.205
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரச வீதி - அரசர்களுக்குரிய வீதிகள்: முழவு எழும் ஒலி இல - தண்ணுமையிலிருந்து உண்டாகும் ஒலிகள் இல; முறையின் - இசை முறைப்படி; யாழ் நரம்பு எழ - யாழின் கண் நரம்பு எழுப்ப; எழும் ஒலி இல - எழுகின்ற ஒலிகள் இல; இமைப்பு இல் கண்ணினர் - இமையாக் கண்ணினராய தேவர்களது, விழவு - விழாவிற்காக; எழும் ஒலி இல - உண்டாகின்ற ஒலிகளும் இல; அழ எழும் ஒலி அலது வேறும் ஒன்று இல - அழுவதனால் உண்டாகின்ற கூக்குரல் ஓசை அல்லாமல் வேறு ஓர் ஒலி இலவாயின.
முழவு - மத்தளம். தண்ணுமை குடமுழா என்பன ஒரு நிகரன. முறை என்பது பண்ணாகும். தேவர்களுக்குச் செய்யும் திருவிழாக்களும் நின்று போயின. கேட்க வேண்டிய ஓசைகள் கேட்கவில்லை; கேட்கத் தகாத ஓசை மட்டுமே கேட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- No sound of drums rose, no sound rose
- as lute strings were struck in their modes, no sound rose
- from festivals for the unblinking-eyed gods; nothing else was there
- but the sound of weeping, in the royal streets.
What the poem says
The royal streets, usually full of drums, the music of the yāḻ and the noise of temple festivals for the gods, now carry only one sound, the sound of weeping. All the sounds that ought to be heard have stopped, and the one that ought not to be heard is everywhere.