கம்பராமாயணம் 1888 · அயோத்தியா 4.206
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தெள் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன்மனை - தெளிந்த ஒலியையுடைய காற்சிலம்புகள் இடையறாது ஒலிக்கின்ற அழகிய வீடுகள் (இப்போது); நள் ஒலித்தில - நள்ளென்ற ஓசை உடையவாய் ஒலிக்கவில்லை; நளிர் - செறிந்த; கலையும் அன்ன - மேகலை அணிகளும் ஒலிக்கா ஆயின; புனல் - நீரில்; புள் ஒலித்தில - பறவைகள் ஒலிக்கவில்லை; பொழிலும் - சோலைகளும்; அன்ன - அதுபோலப் புள் ஒலிக்கா ஆயின; மலர் - பூக்களில்; கள் - வண்டுகள் ஒலித்தில; களிறும் - யானைகளும் (மதநீர் படாமையால்); அன்ன - அதுபோல வண்டுகள் ஒலிக்காவாயின.
சிலம்பு, மேகலை அணிவாரும் இயங்குவாரும் இல்லை. பறவைகள் அடங்கின. வண்டுகளும் ஒடுங்கின என்றார். “ஏ' காரங்கள் அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The golden houses where clear-toned anklets used to ring
- rang out no more; so too the close-set girdle bells;
- no birds called on the waters, nor in the groves;
- no bees hummed on the flowers, nor on the elephants.
What the poem says
The homes no longer ring with the anklets and girdle bells of women moving about; no one is wearing them or walking. Birds are silent on the ponds and in the gardens. Bees no longer hum over the flowers, nor around the elephants' temples, which have stopped flowing with the musth fluid that attracts them.