கம்பராமாயணம் 1892 · அயோத்தியா 4.210

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாந்தர் தம் மொய்ம்பினில் மகளிர் கொங்கையாம்
ஏந்து இள நீர்களும் வறுமை எய்தின
சாந்தம் ; அ மகிணர் தம் முடியில் , தையலார்
கூந்தலும் வறுமைய மலரின் கூலமே .

பொருள் · Meaning in Tamil

மாந்தர்தம் மொய்ம்பினின் - ஆடவர்களது வலிய தோளில்; சாந்தம் - பூசப்பெற்ற சந்தனத்தை; மகளிர் கொங்கை ஆம் ஏந்து இளநீர்களும் - பெண்களது தனங்களாகிய உயர்ந்துள்ள இளநீர்களும்; வறுமை எய்தின - இல்லாமை அடைந்தன; அம் மகிழ்நர்தம் முடியின் - அவ் ஆடவர்களது முடியில் உள்ள; மலரின் கூலம் - பூக்களின் திரட்சியை; தையலார் கூந்தலும் - மகளிரது கூந்தலும்; வறுமைய - இல்லாமை அடைந்தன.

ஆடவர் தோளில் பூசப்பெற்ற சந்தனம் மகளிர் கொங்கையைச் சென்றடையும். இங்கே ஆடவர் சந்தனம் பூசாமையாலும் மகளிரைத் தழுவாமையாலும் மகளிர் கொங்கை சந்தனம் பெறாது வறுமை எய்தினவாம். ஆடவர்தம் தலைமுடியில் உள்ள மலர், கூட்டத்தால் மகளிர் கூந்தலைச் சென்றடையும். இங்கே ஆடவர் மலர் சூடாமையாலும், மகளிரைக் கூடாமையாலும் மகளிர் கூந்தல் மலர் வறுமை அடைந்தனவாம். “ஏ” ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The women's breasts, raised like young coconuts, went without
  2. the sandal paste of the men's strong shoulders;
  3. and the women's hair went without the heaped flowers
  4. of their lovers' crowns.

What the poem says

Normally the sandal paste on a man's shoulders rubs off onto his beloved's breasts when they embrace, and the flowers in his hair end up in hers. Now the men wear no sandal paste or flowers and no one makes love, so the women's breasts and hair are bare of both. The verse is a delicate way of saying that all love-making has stopped.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māntartam moympiṉiṉ makaḷir koṅkai ām
ēntu iḷanīrkaḷum vaṟumai eytiṉa
cāntam; am makiḻnartam muṭiyiṉ, taiyalār
kūntalum vaṟumaiya malariṉ kūlamē.