கம்பராமாயணம் 1893 · அயோத்தியா 4.211

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓடை நல் அணி முனிந்தன உயர் களிறு உச்சிச்
சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை ; கொடியின்
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி ;
மேடை , நல் அணி முனிந்தன வெள் இடை , பிறவும் .

பொருள் · Meaning in Tamil

உயர்களிறு - பெரிய யானைகள்; ஓடை நல் அணி முனிந்தன - முகபடாம் ஆகிய நல் அணியை வெறுத்தன; தொடர்மனை - வரிசையான மாளிகைகள்; உச்சிச் சூடைநல்லணி முனிந்தன - தம் சிகரத்தில் அணிதற்குரிய சூடா என்னும் நல்லணிகளை அணியாமல் வெறுத்தன; அம்பொன் செய் இஞ்சி - அழகிய பொன்னாற் செய்த மதில்கள்; கொடியின் ஆடை நல் அணி முனிந்தன - கொடிச் சீலை ஆகிய நல்ல அழகினை வெறுத்தன; மென் நடைப் புறவம் - மென்மையான நடையினையுடைய புறாக்கள்; பேடை நல்லணி முனிந்தன - பேடையொடு கூடிய நல்ல அணியை வெறுத்தன. 'முனிந்தன' என்பது இங்கே புனையாமையைக் குறித்ததாம். யானைகள் முகபடாம் அணிந்து அலங்கரிக்கப் பெறவில்லை. மாளிகையின் கோபுர உச்சிகள் அழகு செய்யப் பெறவில்லை. மதில்களில் கொடிச் சீலை இல்லை. புறாவும் பெடையும் கூடி அணையும் அழகு இல்லை என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The tall elephants spurned the fine ornament of their face-plates; the rows of houses
  2. spurned the fine ornaments for their pinnacles; the lovely golden walls
  3. spurned the fine ornament of their cloth banners;
  4. the soft-stepping doves spurned the fine grace of their mates.

What the poem says

Nothing is adorned any more. The elephants wear no decorated face-plates, the house tops carry no crowning ornaments, and no flags fly from the golden city walls. Even the doves no longer pair with their mates. 'Spurned' here simply means that the decoration is not put on. A new metre begins with this verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōṭai nal aṇi muṉintaṉa uyar kaḷiṟu uccic
cūṭai nal aṇi muṉintaṉa toṭar maṉai; koṭiyiṉ
āṭai nal aṇi muṉintaṉa am poṉ cey iñci;
pēṭai, nal aṇi muṉintaṉa meṉ naṭaip puṟavam.