கம்பராமாயணம் 1895 · அயோத்தியா 4.213
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ் அயோத்தி மா நகரம் -; ஓவு இல் நல் உயிர் - ஒழிதல் இல்லாத நல்ல உயிர்; உயிர்ப்பினோடு - பெரு மூச்சோடு; உடல் பதைத்து - உடலில் துடித்து; உலைய - அங்கும் இங்குமாய் வருந்த; மேவு - பொருந்திய; தொல் எழில் அழகு கெட - பழைய வளரும் அழகு கெட; விம்மல் நோய் விம்ம - அழுகைநோய் மிக; தாவு இல் ஐம்பொறி மறுகுற - கெடுதல் இல்லாத ஐம்பொறிகள் சுழன்று கலங்க; தயரதன் என்ன - தயரதனைப் போல; ஆவி நீக்கின்றது ஒத்தது - உயிர் விடுவதைப்போல் உள்ளது.
மன்னன் எவ்வழி அவ்வழி மன்னுயிர் ஆதலின், அயோத்தி நகரின் ஆவி நீக்குவார் போல் ஆயினர் என்பதை நகரின்மேல் ஏற்றிக் கூறினார். உயிர் உலைகிறது. துன்பம் மிகுகிறது. அழகு கெடுகிறது, ஐம்பொறி கலங்குகிறது இத்தனையும் உயிர் போவதற்கு முன் நிகழ்வனவாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Its good, unfailing life tossing as the body heaved with gasping breath,
- its ancient, settled beauty ruined, the sickness of sobbing swelling,
- its five steadfast senses reeling, like Tacarataṉ himself,
- the great city of Ayōtti seemed to be giving up its life.
What the poem says
The whole city is pictured as a dying person, just like its king. Its breath comes in gasps, its body writhes, its old beauty is gone, it is racked with sobbing and its senses are confused. These are the signs that come before death. As the king is, so are his people, and Ayōtti seems to be breathing its last along with Tacarataṉ.