கம்பராமாயணம் 1896 · அயோத்தியா 4.214
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அந்நகர் - அந்த அயோத்தி நகரம், உயங்கி - வாடி; உலைவுற - வருந்த; ஒருங்கு - ஒருசேர; உழைச் சுற்றம் - ஏவல் செய்வோர்; மயங்கி ஏங்கினர் - அறிவு கலங்கி அழுது; வயின் வயின் - அங்கங்கே; வரம்பிலர் தொடர - அநேகர் பின்பற்றி வர; இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் - சஞ்சரிக்கின்ற பல உயிர்களையும் உடலாகக் கொண்டு அவற்றுக்கு ஒப்பற்ற உயிராக இருக்கின்ற இராமன்; தயங்கு - விளங்குகின்ற; பூண் முலைச் சானகி - அணிகலன் அணிந்த தனங்களை உடைய சீதை; இருந்துழிச் சார்ந்தான் - இருந்த அரண்மனையை அடைந்தான்.
உழைச் சுற்றம் அருகிருந்து வேலை செய்வோர். “உயிர்க்கு உயிர் என நின்ற இராமன்' என்பதனைத் திருமாலாகிய பரம்பொருள் தத்துவத்தில் உயிர்க்குயிராய் உள்நின்று உணர்த்தும் தன்மையை நோக்கிக் கூறியதாகவும் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As that city wilted and suffered, and his attendants all together,
- dazed and sobbing, followed in countless numbers everywhere,
- Irāmaṉ, who stood as the one life of all the many moving lives,
- came to where Cāṉaki sat, her breasts bright with ornaments.
What the poem says
With the grieving city and countless attendants trailing behind him, Irāmaṉ reaches the palace where Cītai, called here Cāṉaki, daughter of Caṉakaṉ, is waiting. He is described as the one life of all living beings, which also hints at his divinity as Tirumāl, who dwells within every soul as its inner life.