கம்பராமாயணம் 190 · பால 5.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மசரதம் அனையவர் - கானல் நீரைப்போன்றவர்களாகிய அரக்கர்களுடைய; வரமும் வாழ்வும் - வரபலத்தையும், வாழ்வையும்; நிசரத கணைகளால் நீறு செய்ய - எமது குறிதவறாத அம்புகளால் சாம்பலாக்க (அழிக்க); யாம் கசரத துரகமாக் கடல் கொள்காவலன் - யாமே, யானை, தேர் காலாள் என்னும் கடல் போன்ற நாற்பெருஞ்சேனைகளையுடைய வேந்தனான; தசரதன் மதலையாய் தாரணிவருதும் - தயரதன் புத்திரனாக உலகத்தில் வந்து அவதரிக்கின்றோம்.
மசரதம்: பேய்த்தேர் (கானல்நீர்). நிசரதம்: உண்மை. நிசரத கணை: உண்மையான அம்புகள் (பொய்யாது தாக்கவல்லது). நீறு: சாம்பல். நீறு செய்தல்: அழித்தலாம். தாரணி: பூமி. பத்துத் தேர் கொண்டு, தன்னுடன் போர்புரிந்த சம்பரனை வென்றவன் என்பதால் “தசரதன்” என்று பெயர் பெற்றான் என்பர். தசம்: பத்து. ரதன்: ரதங்களை வென்றவன். “வெஞ்சினத்து அவுணர் தேர்பத்தும் வென்றுளேன்” என்பது தயரதன் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதாகும்.
மதலை: விழுது. புதல்வருக்கு ஆகிவந்தது உவமையாகுபெயர். வருதும்: தன்மைப் பன்மை வினைமுற்று. யாம் வருதும் என முடியும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To burn to ashes the boons and the lives of those who are like a mirage
- with arrows that never miss, We
- will come to earth as the son of Tacarataṉ, the guardian
- whose sea of elephants, chariots, horses and foot soldiers is vast.'
What the poem says
Viṣṇu announces his plan. He will be born as the son of Tacarataṉ, lord of a vast army, and with unerring arrows he will burn away the demons. For all their boons and power, they are as unreal as a mirage.
The verse plays on Sanskrit words ending in -ratha. The commentary explains that 'Tacarataṉ' means one who defeated ten chariots, from a battle in which the king overcame the demon Śambara.