கம்பராமாயணம் 191 · பால 5.23

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1' வளை ஒடு, திகிரியும், வடவை தீ தர
விளைதரு கடு உடை விரிகொள் பாயலும்,
இளையவர் என அடி பரவ, ஏகி, நாம்
வளை மதில் அயோத்தியில் வருதும்' என்றனன்.

பொருள் · Meaning in Tamil

வளையொடு திகிரியும் - எமது படைக்கலங்களான சங்கும் சக்கரமும்; வடவை தீதர விளைதரு கடு உடை விரிகொள்பாயலும் - வடவா முகாக்கினியும் தீய்ந்து போகச் செய்யும் நஞ்சினை உடைய, எமதுபடுக்கையான அனந்தனும்; இளையவர்கள் என அடி பரவ - தம்பியராகப் பிறந்து எம்மை அடிவணங்க; ஏகி, வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன் - பூமியில் சென்று சுற்றும் வளைந்த மதிலை உடைய அயோத்தி மாநகரில் அவதரிப்போம் என்றான்.

‘வளையொடு’ என்பதிலுள்ள ‘ஒடு’ உம்மைப் பொருளில் வந்தது. வளை: சங்கு. வளைந்திருப்பது காரணமாக இப்பெயர் அமைந்தது. கடல் நடுவே ஒரு குதிரை இருப்பதாகவும், அதன் முகத்தில் தோன்றும் தீயில் கடல் நீர் வற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறுவர். வடவை முகத்தில் தோன்றும் தீ என்பதால் ‘வடவைத் தீ’ என்றார். கடு: நஞ்சு. பாயல்: படுக்கை. விரிகொள்: விரிதலை உடைய. சக்கரம் பரதனாகவும், சங்கு சத்துருக்கனாகவும், அனந்தன் இலக்குவனாகவும் வந்தனர் என்பார். அயோத்திக்கு ‘சாகேதம்’ என்ற ஒரு பெயரும் உண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'And with my conch and my discus, and my wide-spread bed
  2. whose poison could scorch even the undersea fire,
  3. coming as younger brothers to worship at my feet, we
  4. will come to Ayōttī with its curving walls,' he said.

What the poem says

Viṣṇu's companions will be born with him. His discus becomes Paratan, his conch Catturukkaṉ, and the serpent Aṉantaṉ, his bed, becomes Ilakkuvaṉ. All three will be his younger brothers in Ayōttī.

The serpent's venom is said to be strong enough to scorch even the fire that burns in the mouth of a mythical mare beneath the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaḷaiyoṭu, tikiriyum, vaṭavai tītara
viḷaitaru kaṭuvuṭai virikoḷ pāyalum,
iḷaiyavarkaḷ eṉa aṭi parava, ēki, nām
vaḷaimatil ayōttiyil varutum' eṉṟaṉaṉ.