கம்பராமாயணம் 192 · பால 5.24

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று அவன் உரைத்த போது, எழுந்து துள்ளினார்,
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்,
'மன்று அலர் செழும் துளவு அணியும் மாயனார்
இன்று எமை அளித்தனர்' என்னும் ஏம்பலால்.

பொருள் · Meaning in Tamil

என்று அவன் உரைத்த போது - அத்திருமால் கூறியருளிய போது கேட்ட (அத்தேவர்கள் அனைவரும்); மன்றல் அம் துளவு அணியும் மாயனார் - மணம் பொருந்திய, அழகிய துழாய்மாலை அணியும் மாயனாகிய திருமால்; இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் - இன்று எங்களை யெல்லாம் காப்பாற்றி அருளினார் என்னும் மகிழ்ச்சியால்; எழுந்து துள்ளினார் நன்றிகொள் மங்கல நாதம் பாடினார் - எழுந்து நின்று ஆடினார்கள்; நன்மையான மங்கல கீதம் பாடினார்கள்.

துள்ளுதல்: ஆடுதல். நன்றி: நன்மை. மங்கலம்: சுபம். இங்கு வெற்றிக் குறித்து நின்றது. நாதம்: ஓசை. இசையைக் குறித்தது. மன்றல்: மணம். மாயம்: சாமர்த்தியம். அதனை உடையவன் மாயன். ஏம்பல்: மகிழ்ச்சி. திருமால் கூறியது கேட்ட தேவர்கள் மகிழ்ச்சியால் ஆடிப்பாடினர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he spoke thus, they leapt up and danced,
  2. and sang songs of good omen,
  3. in their delight that the Wondrous One, who wears the lovely, fragrant tulasi,
  4. had saved them that very day.

What the poem says

Hearing Viṣṇu's promise, the gods leap up, dance and sing auspicious songs of victory.

They are sure that the Wondrous One has already rescued them. 'Wondrous One' is Māyaṉ, a name for Viṣṇu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu avaṉ uraittapōtu, eḻuntu tuḷḷiṉār,
naṉṟikoḷ maṅkala nātam pāṭiṉār,
'maṉṟal am ceḻuna tuḷavu aṇiyum māyaṉār
iṉṟu emai aḷittaṉar' eṉṉum ēmpalāl.