கம்பராமாயணம் 193 · பால 5.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எம் பொருமல் போயது என்னா - எங்கள் துயரம் தீர்ந்தது என்று கூறி; இந்திரன் உவகை பூத்தான் - இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான்; தூய மா மலர் உளோனும் - தூய அழகிய தாமரையில் வாழும் பிரமனும்; சுடர் மதி சூடினோனும் - ஒளியுடைய சந்திரனைத் தலையிலணிந்துள்ள சிவபெருமானும்; சேய் உயர் விசும்பு உளோரும் - மிக உயர்வான விண்ணுலகிலே வாழ்பவர்களும், தீர்ந்தது எம் சிறுமை என்றார் - எமது தாழ்வு தீர்ந்தது என்றார்கள்; மா இரு ஞாலம் உண்டோன் - அகன்ற பெரிய இவ்வுலகை உண்டருளிய திருமால்; கலுழன் மேல்சரணம் வைத்தான் - தான் ஏறிவந்த கருடன் மீது திருவடிகளை வைத்தான்.
உவகை பூத்தல்: மகிழ்ச்சியில் முகம் மலர்தல் போல்வது. தீர்ந்தது என்பன விரைவும், உறுதியும் பற்றி வந்த இறந்த காலவினை முற்றுக்கள். “சரணம் வைத்தான்” கருடன் மீது திருவடிகளை வைத்துத் தனது இருப்பிடத்துக்குப் புறப்படத் தொடங்கினான் என்பது கருத்து. என்னா: என்று; செய்யா என்ற வாய்பாட்டு வினை எச்சம் செய்து என்ற பொருளையுடையது. உளோன்: ‘உள்ளோன்’ இடை குறைந்து நின்றது. மா, இரு: உரிச் சொற்கள். மிகப்பெரிய என்பதை உணர்த்தி நின்ற மீமிசைச் சொல். ஊழிப் பெருவெள்ளத்தில் உலகம் அழியாது, திருமால் அதனை உண்டு, வயிற்றில் வைத்துப் பாதுகாத்தார் என்பது புராணக் கருத்து. “உலகம் உண்ட பெருவாயன்” என, நம்மாழ்வாரும் இதனைக் குறிப்பிடுவார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Crying 'Our grief is gone,' Indra bloomed with joy;
- he of the pure great lotus, and he who wears the bright moon,
- and those in the far, high heaven said, 'Our shame is ended';
- and he who swallowed the vast great world set his feet on Karuṭaṉ.
What the poem says
Indra, Brahmā, Śiva and all the gods declare that their grief and humiliation are over.
Viṣṇu mounts Karuṭaṉ to return to his own abode. He is called the one who swallowed the world, from the myth that at the cosmic deluge he holds the universe safe in his belly.