கம்பராமாயணம் 1900 · அயோத்தியா 4.218
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“பொரு இல் எம்பி புவி புரப்பான் - ஒப்பற்ற என் தம்பியாகிய பரதன் பூமியைக் காப்பாற்றி அரசாள்வான்; புகழ் - புகழ்தற்குரிய; இருவர் ஆணையும் ஏந்தினென் - தந்தை, தாய் இருவரது கட்டளையையும் தலைமேல் தாங்கினேன்; நான் இன்று போய் - நான் இன்றே புறப்பட்டுச் சென்று; கருவி மாமழைக் கல்தடம் கண்டு - தொகுதியான சிறந்த மேகம் நிரம்பிய மலை வழிகளை உடைய காட்டைப் பார்த்து; ஈண்டு வருவென் - இங்கே வருவென்; நீ வருந்தலை” - நீ வருத்தமுறாதே; என்றான்.
'கருவி' - இடி, மின்னல் முதலியவற்றை உடைய தொகுதி என்று பொருள். “கருவி தொகுதி' (தொல். சொல்.354) “கருவி வானம்” (அகநா.4:6) என்பது காண்க. சீதைக்கு வருத்தம் மிகாது இருக்க “இன்று போய்க் கண்டு வருவென்' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'My peerless brother will protect the earth; the commands
- of the two who deserve praise I have taken on my head; today I go,
- and when I have seen the rocky forest paths under the great massed rain clouds,
- I will come back here; do not grieve,' he said.
What the poem says
Irāmaṉ answers gently. His brother Paratan is to rule, and he himself has accepted the commands of his father and of Kaikēyi. He says he will go today, see the cloud-capped mountain forests, and come back, and she should not be upset. He makes the exile sound like a short trip so as to soften the blow for Cītai.