கம்பராமாயணம் 1903 · அயோத்தியா 4.221

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன தன்மையள் `'ஐயனும் அன்னையும்
சொன்ன செய்யத் துணிந்தது தூயது ஏ ;
என்னை என்னை ? 'இருத்தி ' என்றாய் '' என்றாள்
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் .

பொருள் · Meaning in Tamil

அன்ன தன்மையள் - அத்தகைய இயல்பினை உடைய சீதை, “ஐயனும் அன்னையும் சொன்ன - தந்தையும் தாயும் இட்ட கட்டளைகளை; செய்யத் துணிந்தது தூயதே - நடந்த முடிவு செய்தது தூய்மை உடையதே (ஆயினும்); என்னை -; என்னை இருத்தி என்றான்?' - எதனால் அரண்மனையிலேயே இரு என்று சொன்னான்; எனா - என்று; உன்னி உன்னி - நினைத்து நினைத்து; உயிர் உமிழா நின்றாள் - உயிர்துடிப்ப இருந்தாள்.

குரவர் சொல் கேட்டல் அறமே ஆயினும் கொண்ட மனைவியைப் பிரிதல் எதனால் என்று அறியாது வருந்துவள் ஆயினாள். பாற்கடலிலிருந்து பிரியாமல் அயோத்தி வரை உடன் வந்தவள், அயோத்தியிலிருந்து அருகில் உள்ள வனம் போகாமல் தடுக்கப்பெறுவது கண்டு வருந்தினாளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She, being such, thought: 'That he resolved to do what his father
  2. and mother told him is pure indeed;
  3. but why, why did he tell me, "Stay here"?' —
  4. and thinking it over and over, she was ready to breathe out her life.

What the poem says

Cītai accepts that Irāmaṉ is right to obey his parents. What she cannot understand is why he tells her, his wife, to stay behind. She came with him all the way from the ocean of milk to Ayōtti, and now she is to be stopped from following him to a forest close by. Brooding on this, she feels her life is about to leave her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa taṉmaiyaḷ `'aiyaṉum aṉṉaiyum
coṉṉa ceyyat tuṇintatu tūyatē;
eṉṉai eṉṉai? 'irutti' eṉṟāṉ'' eṉā
uṉṉa uṉṉa uyir umiḻā niṉṟāḷ.