கம்பராமாயணம் 1904 · அயோத்தியா 4.222
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராமன்) “நின் - (சீதையே!) உனது; சில் அரக்கு உண்ட - குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற; சேவடிப் போது - சிவந்த அடிமலர்கள்; வல் அரக்கரின் - கொடிய அரக்கர் போலத் (தோன்றும்); மால் வரை - பெரிய மலையில்; போய் விழுந்து - சென்று பரவி; அல் - இரவிலும்; அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் - அரக்கினை உருக்கினாற்போல வெப்பத்தைச் செய்கின்ற காட்டு வழியில் உள்ள; கல் - கற்கள்; அரக்கும் - உராய்கின்ற; கடுமைய அல்ல” - கடுமையுடையன அல்ல; ' என்றான் -.
மலைவழி, காட்டுவழி, இரவிலும் வெப்பம் செய்யும் வழி, கூரிய கற்கள் உற்ற வழி எனவே வெப்பமான - கூர்ங்கற்கள் உராய்வதனால் ஏற்படும் வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன் பாதம்; குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய மலரனைய பாதம். அதனால்தான் 'இருத்தி' என்றேனே அன்றி உன்னைப் பிரிதல் வல்லமையால் சொன்னேன் என்று கருதாதே என்பது போல இராமன் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Your flower-like red feet, tinted with cool lac dye,
- are not hard enough for the stones that grind
- on forest paths that, spreading over great mountains like cruel demons,
- burn even at night with a heat that would melt lac,' he said.
What the poem says
Irāmaṉ explains that he spoke only out of concern for her. Her soft feet, painted with cool red dye, could not stand the forest tracks: mountain paths as grim as demons, so hot even at night that they would melt lac, and full of sharp stones. He did not tell her to stay because he could bear to be parted from her.