கம்பராமாயணம் 1907 · அயோத்தியா 4.225

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனைய வேலை - அப்பொழுது; அகமனை எய்தினள் - மாளிகைக்குள்ளே சென்றாள்; புனையும் சீரம் - உடுத்தற்குரிய மரவுரியை; துணிந்து - (செய்யத்தக்கது இதுதான் என எண்ணி) உறுதி செய்துகொண்டு; புனைந்தனள் - உடுத்திக் கொண்டு; நினைவின் - உடன் போம் கருத்தோடு; வள்ளல் பின் வந்து - இராமனுக்குப் பின்புறமாக வந்து; அயல் - அருகிலே; பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் - பனைபோன்று நீண்ட இராமனது கையைப் பற்றிக் கொண்ட செயலினளாய்; நின்றனள் -.

“நினைவின்' என்பதற்கு நினையும் மாத்திரத்து எனக் கூறி, இராமன் சிந்திக்குமளவிலேயே அவ்வளவு விரைவாக மரவுரி உடுத்தி அயல் வந்து நின்றாள் எனலும் ஆம். கையினள் - செயலினள் (கை - செய்கை) எண்ணல், துணிதல், செய்தல் மூன்றும் பிராட்டியிடத்து விரைந்து நிகழ்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment she went into the inner rooms,
  2. made up her mind and put on bark cloth to wear,
  3. and with that intent came behind the generous one and stood at his side,
  4. her hand clasping his long arm, long as a palmyra.

What the poem says

Before Irāmaṉ has finished thinking, Cītai has acted. She goes inside, puts on bark cloth, and comes back to stand at his side, holding his long arm. Deciding, resolving and acting all happen in her almost at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiya vēlai, aka maṉai eytiṉaḷ,
puṉaiyum cīram tuṇintu puṉaintaṉaḷ,
niṉaiviṉ, vaḷḷal piṉ vantu, ayal niṉṟaṉaḷ,
paṉaiyiṉ nīḷ karam paṟṟiya kaiyiṉāḷ.