கம்பராமாயணம் 1910 · அயோத்தியா 4.228

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும் - முல்லை அரும்பும், கடலில் விளைந்த முத்தும் போட்டியிட்டாலும்; வெல்லும் வெண்நகையாய்! - அவற்றை வெல்லுகின்ற வெள்ளிய பற்களை உடையவளே; விளைவு உன்னுவாய் அல்லை - (உடன் வருதலால்) உண்டாகக் கூடிய தீமையைக் கருதுகின்றாயில்லை; போத அமைந்தனை - உடன் வருதற்குச் சித்தமாய்விட்டாய்; ஆதலின் -; எல்லை அற்ற - அளவற்ற, இடர் தருவாய்” - துன்பங்களை உண்டாக்குவாய்; ' என்றான் -.

எதிரது நோக்கிக் கூறியது. உன் கால்கள் மென்மையானவை என்று கூறி முன் மறுத்தவன் இப்போது 'நீ காட்டிற்கு வருதலால் கணக்கற்ற தீங்கு விளையும்' என்று கூறி மறுக்கலானான். பெண்டிர் உடன்வரின் அவர்களைக் காத்தல் முதலிய முயற்சிகளில் பல தீமைகளைச் சந்திக்க நேரும் என்பது இராமன் கணிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You whose white smile would win even if jasmine buds
  2. and pearls of the sea were pitted against it, you do not think
  3. of what will follow; you have made yourself ready to go; and so
  4. you will bring troubles without end,' he said.

What the poem says

Irāmaṉ tries another argument. Earlier he said her feet were too tender; now he warns that if she comes she will bring endless trouble, because she is not thinking ahead. Protecting her in the wilderness will expose them both to danger. The words unknowingly foreshadow what is to come: her abduction by Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mullaiyum kaṭal muttum etirppiṉum
vellum veṇ nakaiyāy! viḷaivu uṉṉuvāy
allai; pōta amaintaṉai; ātaliṉ
ellai aṟṟa iṭar taruvāy' eṉṟāṉ.