கம்பராமாயணம் 1911 · அயோத்தியா 4.229

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொற்றவன் அது கூறலும் , கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள் ,
'உற்று நின்ற துயரம் இது ஒன்றும் ஏ ?
என் துறந்த பின் இன்பம் கொல் ஆம் ? '' என்றாள் .

பொருள் · Meaning in Tamil

கொற்றவன் - அரசனாகிய இராமன்; அது கூறலும் - அச்சொல் சொல்லுதலும்; கோகிலம் செற்றது அன்ன குதலையள் - குயில் கோபம் கொண்டது போன்ற குதலைப் பேச்சினை உடைய சீதை; சீறுவாள் - கோபித்து; “உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே? - உம்மை அடைந்து நின்ற துன்பம் நான் உடன் வருவதாகிய இது ஒன்றுதானோ; என் துறந்த பின் இன்பம் கொல்” - என்னை இங்கேயே விட்டு விட்டுப் போனபிறகு காட்டில் உங்களுக்கு இன்பமே உண்டாகும் போலும், ' என்றாள் -.

குதலை - பொருள் தெரிந்து சொல் தெரியாதது. 'ஆம்' உரையசை 'கொல்' ஐயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as the prince said that, she whose lisping speech
  2. was like a koel's in anger flared up and said:
  3. 'Is this the only trouble that has come to you and stays?
  4. Once you have left me, will it be all joy?'

What the poem says

Cītai, whose sweet speech now sounds like an angry koel, turns his argument back on him. Is she the only hardship he will face? Does he imagine that once he has left her behind, the forest will be nothing but pleasure for him?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṟṟavaṉ atu kūṟalum, kōkilam
ceṟṟatu aṉṉa kutalaiyaḷ cīṟuvāḷ,
'uṟṟa niṉṟa tuyaram itu oṉṟumē?
eṉ tuṟantapiṉ iṉpam kolām?'' eṉṟāḷ.