கம்பராமாயணம் 1912 · அயோத்தியா 4.230

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெருந்தகை - இராமன்; பிறிது ஓர் மாற்றம் பேசலன் - வேறு ஒரு வார்த்தையும் பேசாதவனாய், மைந்தரும் மாதரும் மறுகி வீழ்ந்து அழ - ஆடவரும் மகளிரும் மனங்கலங்கி விழுந்து அழுதலால்; (அவர் கண்ணீரால் சேறாக) செறுவின் வீழ்ந்த - வயல் போலக் கிடக்கின்ற; நெடுந் தெரு - பெரிய தெருவின்கண்; நெறிபெறாமை - வழி கிடைக்கப் பெறாமையால், அரிதினின் - சிரமப்பட்டு; நீங்குவான் சென்றனன் - நீங்கச் சென்றான்.

அழுதலால் கண்ணீர் வெள்ளம் வீழ்ந்து தெரு சேறு ஆகியது. அதனால், வயல்போல உள்ளது. இனி “செரு' என எதுகை நோக்கி இடையினம் வல்லினம் ஆனதாகக் கொண்டு” போர்க்களம் போல மைந்தரும் மகளிரும் தாறுமாறாக வீழ்ந்து கிடக்கின்ற தெருவில் சிரமப்பட்டுக் கடந்து சென்றான் - என உரைத்தலும் ஒன்று. செறு - நெருக்கம் என்று பொருள் கூறி நெருக்கமாக வீழ்ந்த என்றும் ஆம். கூட்ட மிகுதியால் தெருவில் நடத்தல் அரிதாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great one spoke not another word;
  2. as men and women fell in distress and wept,
  3. he went along the long street that lay like a muddy field,
  4. making his way out with difficulty, for there was no path to walk.

What the poem says

Irāmaṉ says nothing more; Cītai will come. He sets off down the long street, but it is so muddy with the tears of the fallen, weeping crowd that it looks like a ploughed paddy field, and he can hardly find a way through. The word may also be read as 'battlefield', with bodies strewn everywhere, or as 'crowded'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṟitu or māṟṟam peruntakai pēcalaṉ,
maṟuki vīḻntu aḻa maintarum mātarum,
ceṟuviṉ vīḻnta neṭun teruc ceṉṟaṉaṉ,
neṟi peṟāmai aritiṉiṉ nīṅkuvāṉ.