கம்பராமாயணம் 1914 · அயோத்தியா 4.232
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆரும் - எவரும்; பின்னர் - பிறகு; அழுது அவலித்திலர் - அழுது துன்பம் உறவில்லை; சோரும் சிந்தையர் - தளர்ந்த மனத்தோடு; யாவரும் சூழ்ந்தனர் - அனைவரும் ஆலோசித்து; “வீரன்முன் - இராமனுக்கு முன்னே; யாம் வனம் மேவுதும்” - நாம் காட்டிற்குச் செல்வோம்; எனா - என்று; போர் என்று ஒல்லொலி கைம்மிக - “போர்' என்று ஒல்லென்ற ஒலி அளவு கடக்க; போயினார் - புறப்பட்டுச் சென்றார்கள்.
“போர்' என்பது ஒலிக்குறிப்பு. 'போர்' போல ஒலி மிகுதியாக எனலும் ஆம். இராமனுக்கு முன்பே காடு செல்வதென முடிவு செய்தமையால் அழுதலும் அவலித்தலும் இல்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- After that no one wept or lamented;
- all of them, sick at heart, took counsel together,
- and saying, 'We will reach the forest before the hero,'
- set out with a din that swelled beyond measure, like a battle.
What the poem says
The citizens stop weeping. Heavy-hearted, they decide among themselves to go to the forest ahead of Irāmaṉ, and they set off with a roar like an army going to war. Having made up their minds to go with him, they no longer have reason to lament.