கம்பராமாயணம் 1915 · அயோத்தியா 4.233
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோதை வில்லவன் - மாலை அணிந்த வில்லை உடைய இராமன்; தாதை - தந்தையது; வாயில் - மாளிகை வாயிலை; குறுகினன் சார்தலும் - அணுகிச் சேர்ந்தவுடன்; தாயரைக் கும்பிடா - உடன்வந்த தாய்மார்களை வணங்கி, “ஆதி மன்னனை - சக்கரவர்த்தியை; நீர் ஆற்றுமின் - நீங்கள் இங்கேயிருந்து தேற்றுங்கள்; ' என்றான் -; மாதராரும் - அம் மகளிரும்; விழுந்து மயங்கினார் - தரையில் விழுந்து மயங்கினார்கள்.
ஆதி மன்னன் சக்கரவர்த்தி தயரதன் - மூத்த முதல் அரசன் ஆதலின். “ஆதி அரசன்' (1708) என்பது காண்க. தயரதனைக் காணாமலே கானகம் செல்வதாக வான்மீகம் சொல்லவில்லை; இது கம்பர் மாற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as he drew near and reached his father's gate,
- he of the garlanded bow bowed to his mothers and said,
- 'Console the first of kings, all of you';
- and the women too fell down and fainted.
What the poem says
At the gate of his father's palace Irāmaṉ bows to the queens who have followed him and asks them to stay and comfort the king. The women collapse. In Kampaṉ, unlike Vālmīki, Irāmaṉ leaves without seeing his father again.