கம்பராமாயணம் 1916 · அயோத்தியா 4.234
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாத் தழும்ப - நா காய்ப்பு ஏறும்படி; அரற்றி - அழுது; நடுங்குவார் - நடுங்கும் அத்தாயர்; தம் மகனை, மருகியை - தம் மகனாகிய இராமனையும் மருகியாகிய சீதையையும்; இளையோனை - இலக்குவனை; வாழ்த்தினார் - வாழ்த்தினார்கள்; ஏத்தினார் - புகழ்ந்தார்கள்; வழுத்தினார் - துதித்தார்கள்; “காத்து நல்குமின் தெய்வதங்காள்!” - காப்பாற்றிக் கொடுங்கள் தெய்வங்களே; ' என்றார்.
மூவரையும் வாழ்த்தினர் என இயைக்க - தெய்வங்களை வழுத்தினார் என இயைக்க. தானாக முன்வந்து வனம் செல்லும் இளையோனை வழுத்தினர் அல்லது ஏத்தினர் எனல் சிறப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They praised their son, they blessed
- their daughter-in-law, they hailed the younger brother;
- 'O gods, guard them and keep them!' they said,
- trembling, wailing until their tongues were raw.
What the poem says
The queens, weeping until their tongues ache, bless Irāmaṉ, Cītai and Ilakkuvaṉ and pray to the gods to protect them. The commentary notes that Ilakkuvaṉ, who chose to go of his own accord, especially deserves their praise.