கம்பராமாயணம் 1918 · அயோத்தியா 5.1

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார் ?
மா இயல் தானை அம் மன்னை நீங்கலாத்
தேவியர் ஒழிந்தனர் ; தெய்வம் மா நகர்
ஓவியம் ஒழிந்தன , உயிர் இலாமையால் ,

பொருள் · Meaning in Tamil

ஏவிய குரிசில்பின் - (தந்தையால்) ஏவப்பெற்றுக் காடு செல்லும் இராமனைத் தொடர்ந்து; ஏகிலார் - உடன் செல்லாதவர்கள்; யாவர்? - எவர் (ஒருவரும் இல்லை); மா இயல் தானையின் - பெருமை பெற்ற சேனையை உடைய; மன்னனை - தசரதனை; நீங்கலா - விட்டுப் பிரியாத; தேவியர் - தேவிமார்கள்; ஒழிந்தனர் - செல்லாது நீங்கினர்: தெய்வ மாநகர் ஓவியம் - அயோத்தி நகர்ச் சித்திரங்கள்; உயிர் இலாமையால் - உயிர் இல்லாத காரணத்தால்; ஒழிந்தன - இராமனுடன் செல்லாமல் நகரத்தில் தங்கிவிட்டன; (மற்ற அனைவரும் சென்றனர்)

தேவிமாரும், ஓவியமும் தவிர மற்ற அனைவரும் இராமன் பின் சென்றனர் எனச் சுருங்கச் சொல்லி இராமன் உடன் சென்ற நகரமாந்தரை விளங்க வைத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Who did not go after the prince who had been sent away?
  2. The queens who would not leave the king of the great army
  3. stayed behind; and in the divine great city
  4. the painted figures stayed, because they had no life.

What the poem says

The new chapter, 'The Immersion in Oil', opens as Irāmaṉ leaves. Everyone in Ayōtti follows him. The only ones left are the queens, who will not leave the king, and the figures painted on the walls, which stay only because they are not alive. In this short way the poet shows how the whole city went after him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēviya kuricilpiṉ yāvar ēkilār?
mā iyal tāṉai am maṉṉaṉai nīṅkalāt
tēviyar oḻintaṉar; teyva mā nakar
ōviyam oḻintaṉa, uyir ilāmaiyāl,