கம்பராமாயணம் 1922 · அயோத்தியா 5.5

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அந்தியில் வெயில் ஒளி அவிய வானகம் ,
நந்தல் இல் கேகயன் பயந்த நங்கைதன்
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய
சிந்தையில் இருண்டது செம்மை நீங்கியே .

பொருள் · Meaning in Tamil

வானகம் - ஆகாயம்; அந்தியில் - மாலைக் காலத்தில்; வெயில் ஒளி அழிய - சூரியனது ஒளி இல்லாமற் போக; நந்தல் இல் - கெடுதல் இல்லாத; கேகயன் பயந்த நங்கைதன் - கேகய நாட்டரசன் புதல்வியாகிய கைகேயியினுடைய; மந்தரை உரை எனும் கடுவின் - மந்தரைக் கூனியின் வார்த்தை என்னும் நஞ்சால்; மட்கிய - மங்கிப் போன (நிலை கெட்ட); சிந்தையின் - மனம் போல; செம்மை நீங்கி - செம்மைத் தன்மை போய்; இருண்டது - இருளடைந்தது.

கூனி வார்த்தையால் நெறிகெட்ட கைகேயியின் இருளடைந்த மனம் போல வானம் செம்மை நீங்கி, ஒளி குன்றி இருளடைந்தது என்றார். அங்கே இருள் - வஞ்சனை, செம்மை - நேர்மை. வானத்தின் செம்மை செவ்வானத்தின் செம்மை - எனக் கொள்க. “ஏ” காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the light of the sun died away at dusk, the sky,
  2. like the mind of the daughter born to the unfailing Kēkaya king,
  3. tarnished by the poison of Mantarai's words,
  4. lost its redness and grew dark.

What the poem says

The red glow of sunset fades and the sky darkens. The poet compares it to Kaikēyi's mind, once upright, which darkened when the hunchbacked maid Mantarai poisoned it with her words. The pun is on 'redness', which in Tamil also means straightness or honesty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antiyil veyil oḷi aḻiya vāṉakam,
nantal il kēkayaṉ payanta naṅkaitaṉ
mantarai urai eṉum kaṭuviṉ maṭkiya
cintaiyiṉ iruṇṭatu cemmai nīṅkiyē.