கம்பராமாயணம் 1924 · அயோத்தியா 5.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1திரு நகர்க்கு ஓசனை இரண்டு , சென்று , ஒரு
விரை செறி சோலையை விரைவின் எய்தினான் ,
இரதம் நின்று இழிந்து , பின் இராமன் இன் துணை
உரை செறி முனிவரோடு உறையும் காலையே .
பொருள் · Meaning in Tamil
இராமன் -; திருநகர்க்கு - அயோத்திக்கு; ஓசனை இரண்டு விரைவின் சென்று - இரண்டு யோசனை தூரம் வேகமாகச் சென்று; ஒரு விரைசெறி சோலையை - மணம்பொருந்திய ஒரு சோலையை; எய்தினான் - அடைந்து; இரதம் நின்று இழிந்து - தேரிலிருந்து இறங்கி; பின் - பிறகு; இன்புறும் - தன் வரவால் மகிழ்ச்சி அடைகின்ற, உரை செறி முனிவரோடு - மந்திரவுரையால் நிறைந்த முனிவர்களோடு; உறையும் காலை - தங்கியிருக்கும் நேரத்தில்.
உரை செறி - புகழ் மிகுந்த என்றும் ஆம். அடுத்த பாட்டில் முடியும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Going two yojanas from the sacred city,
- he quickly reached a grove dense with fragrance;
- there he stepped down from the chariot, and then, while Irāmaṉ
- stayed with sages full of holy words, who rejoiced at his coming —
What the poem says
Two yojanas from Ayōtti, a distance of many miles, Irāmaṉ reaches a fragrant grove. He gets down from the chariot to spend the night with the sages living there, who are delighted at his arrival. The sentence runs on into the next verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiru nakarkku ōcaṉai iraṇṭu, ceṉṟu, oru
virai ceṟi cōlaiyai viraiviṉ eytiṉāṉ,
iratam niṉṟu iḻintu, piṉ irāmaṉ iṉpuṟum
urai ceṟi muṉivarōṭu uṟaiyum kālaiyē.