கம்பராமாயணம் 1925 · அயோத்தியா 5.8

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குரிசிலை விடாத சேனை - இராமனை விடாது அவனைப் பின் பற்றிச் சென்ற சேனையானது; ஓர் ஓசனை வட்டம் வளைவிற்றாய் - ஓர் ஓசனை தூரம் உள்ள வட்ட வடிவாகச் சூழ்ந்து; நடு - இடையில்; எள்தனை இடவும் - எள்ளை இட வேண்டும் என்றாலும்; ஓர் இடம் இலாவகை - ஒரு சிறிதும் இடம் இல்லாதபடி; புள்தகுசோலையின் புறத்து - பறவைகள் தங்குதற்குத் தக்க சோலையின் புறத்து; போர்த்து என - மூடிக் கொண்டது போல; விட்டது - தங்கி அமைந்தது.

இராமனைச் சூழ்ந்து வட்டமாக உடன் சென்றோர் இடைவெளி இன்றித் தங்கினர் என்பதாம். எள்ளைக் கூறினார் துன்பத்தின்கண் நிகழ்வதாகலின். இராமன் பிரிவு, தசரதன் இறப்பு ஆகியன முன்னும் பின்னும் உள்ள துக்க நிகழ்ச்சி ஆதலின் அவற்றின் தாக்கம் கவிஞனுக்கு எள்ளைக் கொண்டு வந்தது என்க. 'புள் தகு - புள்தங்கு' 'தங்கு' என்பது இடைக்குறை 'தகு' என்று நின்றது எனலும் ஆம். 'எண்' என்னும் சொல் 'எள்' என நின்றது. “வேற்றுமை அல்வழி எண் என் உணவுப்பெயர்” (தொல். எழுத்து. புள்ளி) 'ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In a ring that curved one yojana round,
  2. so that there was no room in the middle even to drop a sesame seed,
  3. as if it had wrapped the outside of the grove where birds settle,
  4. the host that would not leave the prince encamped.

What the poem says

The crowd that has followed Irāmaṉ camps all round the grove in a circle a yojana across, packed so tightly that there is no room to drop a sesame seed. The poet's choice of sesame may be deliberate, since sesame is used in funeral rites, and the chapter is framed by Irāmaṉ's departure and Tacarataṉ's death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭṭam ōr ōcaṉai vaḷaiviṟṟāy naṭu
eḷtaṉai iṭavum ōr iṭam ilāvakai
puḷ taku cōlaiyiṉ puṟattup pōrtteṉa
viṭṭatu; kuricilai viṭāta cēṉaiyē.