கம்பராமாயணம் 1928 · அயோத்தியா 5.11

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெரும் பகல் வருந்தினர் - பெரிய பகற் பொழுதில் வழிநடந்து மிகவும் வருந்திய; தெங்கின் குரும்பைகள் பொரும் - தென்னங் குரும்பைகளைத் தோல்வியுறச் செய்யும்; பிறங்கு முலை - விளங்கிய முலைகளை உடைய; செவிலி மங்கையர் குறங்கில் - தம்மை வளர்க்கும் தாயரது துடையில்; அரும்பு அனைய கொங்கை - தாமரைமலர் அரும்பை ஒத்த முலையையும்; அயில் அம்பு அனைய உண்கண் - கூரிய அம்பை ஒத்த மை உண்ட கண்ணையும் உடைய, கரும்பு அனைய செஞ்சொல் நவில் - கரும்பைப் போலும் இன்ப செவ்விய சொற்களைப் பேசுகின்ற; கன்னியர் - இள மகளிர்; துயின்றார் - தூங்கினர்.

செவிலி மங்கையர் வயதின் மிக்கோர் என்பதைத் தென்னங் குரும்பை போலும் முலை என்பதனால் அறிவுறுத்தி; அவர் துடையில் துயிலும் கன்னியர் இளவயதினர் என்பதனை அரும்பை ஒத்த முலை என்பதனாற் கூறிய திறம் அறிந்து மகிழத் தக்கது. அரும்பு - தாமரை அரும்பு ஆம் 'பூவெனப்படுவது பொறி வாழ் பூவே” (நால்வர் நான்மணி. 40) என்பவாதலின் யாண்டும் இன்னமலர் என்னாது மலர் என்றவழி இடம் நோக்கித் தாமரையே சொல்லப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Worn out by the long day, on the laps of the nursemaids
  2. whose full breasts outdo young coconuts,
  3. the maidens, with breasts like buds, painted eyes like sharp arrows,
  4. and speech sweet as sugarcane, fell asleep.

What the poem says

Exhausted from the long day's walk, unmarried girls fall asleep with their heads on the laps of their nurses. The poet marks the difference in age through the images: the nurses' breasts are compared to young coconuts, the girls' to lotus buds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1perum pakal varuntiṉar, piṟaṅku mulai teṅkiṉ
kurumpaikaḷ porum cevili maṅkaiyar kuṟaṅkil,
arumpu aṉaiya koṅkai ayil ampu aṉaiya uṇ kaṇ
karumpu aṉaiya ceñcol navil kaṉṉiyar tuyiṉṟār.