கம்பராமாயணம் 1929 · அயோத்தியா 5.12

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அகம் பூ நிறைந்த புளினத் திரள்கள் தோறும் - தம்மிடத்தில் மலர்கள் நிறைந்துள்ள மணல் மலைகளிடமெல்லாம்; மா வகிரின் உண்கணர் மடப்பிடியின் வைக - பிளந்த மாவடுப் போன்ற மை உண்ட கண்களை உடைய மகளிர் இளைய பெண் யானையைப் போலத் தூங்கத் தங்க; தூ அகல் இல் குந்த மறமைந்தர்கள் - தசை எப்போதும் அகலாமல் இருக்கப்பெற்ற குந்தப் படையை உடைய வீரமறவ இளைஞர்கள்; சேவகம் அமைந்த சிறுகண் கரிகள் என்ன - பிடியைப் பாதுகாப்புச் செய்யும் தொழில் புரிகின்ற சிறிய கண்ணை உடைய களிற்றியானைகள் போல, துயின்றார் - தூங்கினார்கள்.

தூ - என்பது தசை ஊன்தங்கிய குந்தம். சேவகம் - வீரச் செயல். 'யானைகட்கும் கூடம்' என்றும் ஆம். சேவகம் - உறக்கம் என்பதும் ஓர் உரை “யானை சேவகம் அமைந்தது' (7280) “தறிபொரு களிநல்யாதனை சேவகம் கள்ளி” (6837) என்பன காண்க. இனிச் சேவகம் என்பது பாதுகாவல்; வீர மறத்தொழில் குறித்து வருதலை; “வீரச் சேவகச் செய்கை” (7281) என்ற பாடற்பகுதியால் அறிக. குந்தம் - ஒரு படைக்கலத்தின் பெயர். கணர் - கண்ணர் - தொகுத்தல் விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On every sandbank covered with flowers,
  2. as the women, with painted eyes like split mangoes, lay like young she-elephants,
  3. the fierce young warriors with lances never free of flesh slept
  4. like small-eyed bull elephants set on guard.

What the poem says

On sandbanks strewn with flowers the women sleep like young female elephants. Beside them the young warriors, whose spears are always stained with enemy flesh, sleep like bull elephants keeping watch over their mates. The word used for their watch can also mean valour, or simply sleep.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pū akam niṟainta puḷiṉat tiraḷkaḷtōṟum
mā vakiriṉ uṇkaṇar maṭap piṭiyiṉ vaika
cēvakam amainta ciṟu kaṇ karikaḷ eṉṉa
tū akal il kunta maṟa maintarkaḷ tuyiṉṟār.