கம்பராமாயணம் 1931 · அயோத்தியா 5.14

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் - சில மகளிர்; மாதவி செய்பந்தர் - குருக்கத்திக் கொடியால் அமைக்கப் பெற்ற பந்தரில்; மாக மணி வேதிகையில் - ஆகாயத்தைப் போன்ற நீலமணிகளால் அமைந்த திண்ணையில்; கேகய நெடுங்குலம் என - மயிலின் பெருங்கூட்டம்போல; கிடந்தார் - உறங்கினார்; சிலர் - சில மகளிர்: பூக வனம் ஊடு - கமுகங்காட்டின் இடையே; படுகர் - மடுவிடத்தில், புளின முன்றில் - மணல்மேடுகளில்; தோகை இள அன்ன நிரையின் - தோகையுடைய இளைய அன்ன வரிசைகளைப் போல; துயின்றார் - தூங்கினார்.

சிலர் மயில்போல, சிலர் அன்னம் போல உறங்கினர். நீலமணித் திண்ணையில் உறங்கியவர் நீல நிற மயில் போன்றார் என்றும், வெண்மையான மணல் மேடுகளில் உறங்கியவர்கள் வெள்ளையான அன்னம் போன்றார் என்றும் கூறியது ஒரு நயம். வேதிகை - திண்ணை. பூகம் - கமுகு. புளினம் - மணல்மேடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On platforms of sky-blue gems under bowers of mātavi creeper,
  2. some lay like a great flock of peacocks;
  3. in the areca groves, on the sandy banks by the pools,
  4. some slept like rows of young swans with soft plumage.

What the poem says

Some women sleep on blue gem-studded platforms under arbours of flowering creeper, and look like a flock of peacocks; their blue setting matches the bird's colour. Others sleep on white sandbanks by the pools in the areca-palm groves, and look like rows of young white swans.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māka maṇi vētikaiyil mātavi cey pantar
kēkaya neṭuṅ kulam eṉac cilar kiṭantār;
pūka vaṉam ūṭu paṭukarp puḷiṉa muṉṟil
tōkai iḷa aṉṉa niraiyiṉ cilar tuyiṉṟār.