கம்பராமாயணம் 1933 · அயோத்தியா 5.16

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் -; குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்ன - குங்கும மலையிலே குளிர்ந்த பனி திரண்டது போல; துங்க முலையில் - தூய தனங்களில்; துகள் உற - மணற்பொடி பரவ; துயின்றார் - தூங்கினர்; சிலர்; அங்கை அணையில் - தமது அழகிய கையாகிற அணையிலே; முகம் எல்லாம் - தங்கள் முகம் எல்லாம்; பொலிவு அழுங்க - ஒளி மலர்ச்சி வாட; பங்கயம் முகிழ்த்தன என - தாமரை மலர்கள் குவிந்துள்ளன என்று கருதும்படி; படிந்தார் - கிடந்து தூங்கினார்கள்.

சிவந்த நகில்கள் வெண்மணல் துகள் பரவியிருப்பது குங்கும மலையில் பனி குழுமியது போலும் என்றார். பெரும்பாலும் ஆடவரினும் மகளிரே அதிகம் துன்பத்தில் துவளுவர் ன் ப அவர்களது துயரத்தையே மிகுதியாக இங்குக் காட்டினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some slept with dust settling on their high breasts,
  2. like cold dew gathered on a mountain of saffron;
  3. some lay with their faces, their brightness faded,
  4. on the pillows of their palms, like lotuses folded shut.

What the poem says

Some women sleep with white sand dusting their saffron-reddened breasts, like frost settled on a mountain of saffron. Others rest their faded faces on their hands, like lotuses that have closed for the night. The poet dwells on the women because they are hit hardest by grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṅkuma malaik kuḷir paṉik kuḻumi eṉṉat
tuṅka mulaiyil tukaḷ uṟac cilar tuyiṉṟār;
aṅkai aṇaiyil polivu aḻuṅka mukam ellām
paṅkayam mukiḻttaṉa eṉac cilar paṭintār.