கம்பராமாயணம் 1934 · அயோத்தியா 5.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏனையரும் - மற்றவர்களும்; இன்னணம் - இவ்வாறு; உறங்கினர் - துயின்றார்கள்; உறங்கா மானவனும் - தூங்காத பெருமை உடைய இராமனும்; மந்திரி சுமந்திரனை - அமைச்சனாகிய சுமந்திரனை; “வா” என்று - வருக என அழைத்து; 'ஊனம் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால் - குற்றம் அற்ற பெரிய நற்பண்புகள் ஒருசேரப் பெற்றுள்ள உன்னால்; மேல் நிகழ்வது உண்டு - இனிச் செய்ய இருப்பதாகிய செயல் உள்ளது; அவ் உரை கேள்” - அந்தச் சொற்களைக் கேட்பாயாக; என விளம்பும் - என்று சொல்லுவான்.
தேர் ஓட்டுபவனாகவும் தசரதனுக்கு முதல் அமைச்சனாகவும் உள்ளவன் இச் சுமந்திரன். சுமந்திரன் என்பது மந்திரத் தலைமையில் உள்ளார் அனைவரையும் பொதுவாகக் குறிக்கவும் வரும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The others too slept in this way; and the hero, who did not sleep,
- called the minister Cumantiraṉ, saying 'Come,'
- and said: 'You who have every great virtue without flaw,
- there is a task that must now be done by you; hear what I say.'
What the poem says
While everyone else sleeps, Irāmaṉ stays awake. He calls Cumantiraṉ, Tacarataṉ's chief minister, who is also driving his chariot, and tells him that there is something he must now do. The name Cumantiraṉ can also be used as a general title for the senior royal counsellors.