கம்பராமாயணம் 1935 · அயோத்தியா 5.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூண்ட பேர் அன்பினாரை - (நம்மிடத்தில்) பேரன்புடைய இவர்களை; போக்குவது அரிது - நம்மை விட்டுப் பிரித்துப் போகச் செய்வது இயலாது; போக்காது - இவர்களை அனுப்பாமல்; ஈண்டுநின்று ஏகல் - இங்கிருந்து மேலும் வனத்திற்குள் செல்வது; பொல்லாது - நல்லதன்று (தீங்கு தரும் ஆகையால்); “எந்தை! - என் தந்தை போன்ற சுமந்திரனே! நீ -; இன்னே - இப்பொழுதே; இரதம் தூண்டினை - தேரைச் செலுத்தினையாகி; மீள்வது ஆக்கின் - திரும்பிப்போவதைச் செய்தால்; சுவட்டை ஓர்ந்து - தேர்ச்சுவட்டை ஆராய்ந்து; என்னை “அங்கே மீண்டனன்' என்ன - என்னை அங்கே அயோத்திக்குத் திரும்பியவனாகக் கருதி; மீள்வர் - திரும்பிச் செல்வர்; இது -; நின்னை - உன்னை; வேண்டிற்று” - வேண்டிக் கேட்டுக்கொள்கிற செயலாகும்; என்றான் -.
நகர மாந்தர் அனைவரும் வனவாசம் செய்தல் ஆனது, ஆதலின் சுமந்திரன் தேரைத் திருப்பினர் சென்றால், தேர்ச்சுவடு அயோத்தி போவது கண்டு இராமன் திரும்பி ஊர் சென்றுவிட்டான் எனக் கருதி நகர மாந்தரும் அயோத்திக்குத் திரும்புவராதலின் அதனைச் செய்க என்று வேண்டினன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'It is hard to send away these people who have bound themselves to us in great love; yet without sending them back,
- to go on from here would be wrong. My father, if you
- drive the chariot back right now, they will read its tracks
- and turn back, thinking I have returned there; this is what I ask of you,' he said.
What the poem says
Irāmaṉ explains his plan to Cumantiraṉ, whom he respectfully calls 'father'. The people love him too much to be sent away, yet he cannot let them follow him into the forest. If Cumantiraṉ drives the empty chariot back to Ayōtti now, in the night, the people will wake, see the wheel tracks heading home, assume Irāmaṉ has gone back, and return to the city themselves.