கம்பராமாயணம் 1936 · அயோத்தியா 5.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செவ்விய குரிசில் கூற - செம்மை வாய்ந்த இராமன் இவ்வாறு சொல்ல; தேர்வலான் - தேர் செலுத்துதலில் வல்லவனாகிய சுமந்திரன்; செப்புவான் - சொல்வான்; “இவ்வயின் நின்னை நீக்கி - இந்த இடத்தில் உன்னைக் கைவிட்டு; இன் உயிர் தீர்ந்து இன்று - இனிய உயிர் நீங்க இன்றைக்கே; ஏகி - புறப்பட்டுச்சென்று; அவ்வயின் - அந்த அயோத்தியிலும்; அனைய - அதுபோலவே உள்ள காட்சிகளை (உயிரற்ற உடல்களை); காண்டற்கு - பார்ப்பதற்கு; அமைதலால் - மனம் பொருந்திச் சேறலால்; அளியன் - இரங்கத் தக்கவனாகிய யான்; அவ்வெவ்விய தாயின் - அந்தக் கொடிய தாயாகிய கைகேயியைக் காட்டிலும்; தீய விதியினின் - கொடிய விதியைக் காட்டிலும்; மேலன் போல் ஆம் - மேம்பட்டவன் ஆவேன் போலும்; ' என்றான்.
“இன் உயிர் தீர்ந்து' உயிர் போகப் பெற்று வெற்றுடலோடு அயோத்திக்கு இன்றே சென்று, இதுபோலவே வெற்றுடல் காட்சிகளையே அங்கும் காண என்று பொருள் செய்தலே பொருந்தும். இனி, 'தீர்ந்தின்று' என்பதை ஒன்றாக்கி, உயிர் நீங்கப்பெறாமல் எனப் பொருள் கூறின், “அனைய” என்கின்ற உவமை மாட்டேறு அதே போன்ற 'உயிரோடு உள்ளவர்களை' எனவே பொருள்பட்டுச் சிறப்பின்றாகும் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the noble prince said this, the master charioteer replied:
- 'It seems I am to outdo that cruel mother and that evil fate,
- for, abandoning you here, with my sweet life gone, I am to go today
- and agree to look on the same sight there; wretched am I,' he said.
What the poem says
Cumantiraṉ is appalled. He must leave Irāmaṉ here and go back to Ayōtti today, a living corpse, only to find the same lifeless grief waiting there. If he does this, he says, he will be crueller than even Kaikēyi and fate itself, which only sent Irāmaṉ away; he will have to abandon him in the wilderness with his own hands.