கம்பராமாயணம் 1937 · அயோத்தியா 5.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“தேவியும் இளவலும் தொடர - மனைவியாகிய சீதையும் தம்பியாகிய இலக்குவனும் தொடர்ந்து வர; செல்வனை - செல்வமகனாகிய இராமனை; பூ இயல் கானகம் - மலர்கள் பொருந்திய காட்டிடத்தில்; புக உய்த்தேன் என்கோ? - செல்லும்படி விட்டுவந்தேன் என்று சொல்வேனோ; கோவினை - இராமனை; உடன்கொடு - கூட அழைத்துக்கொண்டு; குறுகினேன் என்கோ? - நகரத்தை அணுகினேன் என்று சொல்வேனோ. இரும்பின் நெஞ்சினேன் - இரும்பின் ஒத்து வலிய நெஞ்சுடைய யான்; யாவது கூறுகேன் - யாது சொல்வேன்?
'பூவியல் கானகம்' என்றது அதனையும் கடுமையாகக் கூறாமல் மென்மையாகக் கூறல் வேண்டும் என்பதால்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Shall I say, "With the lady and the younger prince following,
- I sent the beloved prince into the flowering forest"?
- Or shall I say, "I have come back bringing the prince with me"?
- What can I say, I with a heart of iron?'
What the poem says
Cumantiraṉ imagines facing the king. Should he say he sent Irāmaṉ, Cītai and Ilakkuvaṉ off into the forest? He cannot claim he has brought the prince home, because that would be a lie. Even here he calls the forest 'flowering', softening the word so as not to sound harsh.