கம்பராமாயணம் 1938 · அயோத்தியா 5.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“பழைய நண்பினேன் - நெடுங்கால நண்பனாகிய யான்; தார் உடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா - மாலையாகத் தொடுக்கும் மலரினும் நடப்பதற்குத் தகுதியில்லாத; வாருடை முலையொடு - கச்சணிந்த நகிலாளாகிய சீதையோடு; மதுகை மைந்தரை - வலிமையுடைய குமாரர்களை; பாரிடை - காட்டு நிலத்தில்; செலுத்தினேன் - (நடந்து செல்லுமாறு) அனுப்பிவிட்டேன்; தீது இலேன் - ஒரு தீமையும் இல்லாதவனாய்; தேரிடை வந்தனன் என்கோ? ' - தேர் மேலே ஏறி ஊர் வந்து சேர்ந்தேன் என்று சொல்வேனோ?
சீதையின் மென்மைத்தன்மையை “மலரினும் நடத்தற்கு வருந்தும்” என்பதால் கூறினார். “தேரிடை வந்தனன்” என்பது அவர்களை நடக்க வைத்து” என்னும் குறிப்பு உணர்த்திற்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Shall I say: "With her whose breasts are bound in a bodice,
- who could not bear to tread even on flowers strung in a garland, I sent
- the mighty princes out onto the bare earth; and I, their old friend,
- came back in the chariot, none the worse"?'
What the poem says
Cumantiraṉ goes on. Cītai is so delicate that she could not walk even on flower petals, yet he, the family's old and trusted friend, will have made her and the princes walk the forest floor while he rides home in comfort, unharmed. The words 'came back in the chariot' carry the reproach: he rode while they walked.