கம்பராமாயணம் 1939 · அயோத்தியா 5.22

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“வன் புலக் கல் மன மதி இல் வஞ்சனேன் - வலிய புலன்களையும் கல்போன்ற மனத்தையும் உடைய அறிவற்ற வஞ்சகனாகிய யான்; என்பு உலப்புற உடைந்து இரங்கும் மன்னன்பால் - உடம்பு அழியும் படி மனம் முறிந்து வருந்தும் தசரதனிடத்து; உன் புலக்கு உரிய சொல்களை உணர்த்தச் செல்கெனோ? - உனது அறிவு வாய்ந்த சீரிய வார்த்தைகளை உணர்த்தப் போகின்றேனோ (அல்லது); தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ? - இயமனது தூதுவன்போலச் செல்லக் கடவேனோ'

செய்தி சொல்லு முன்னரே தசரதன் இறந்துபடுவான் ஆதலின், 'இயம தூதன்போலச் செல்வேனோ' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Shall I, a deceiver without sense, with hard senses and a heart of stone,
  2. go to the king, who is broken and grieving till his very bones waste away,
  3. to deliver your wise words?
  4. Or shall I go as a messenger of the lord of the southern realm?'

What the poem says

Cumantiraṉ calls himself a stone-hearted, senseless traitor. Is he to carry Irāmaṉ's wise message to a king already wasting away with grief? He would arrive more like a messenger of Yamaṉ, the god of death who rules the south, since the king is likely to die before he can even finish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṉ pulak kal maṉa mati il vañcaṉēṉ,
eṉpu ulappuṟa uṭaintu iraṅkum maṉṉaṉpāl
uṉ pulakku uriya col uṇarttac celkeṉō?
teṉpulak kōmakaṉ tūtiṉ celkeṉō?