கம்பராமாயணம் 1941 · அயோத்தியா 5.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“அங்கிமேல் வேள்வி செய்து - நெருப்பின்கண் அசுவமேதம், புத்திர காமேட்டி முதலிய யாகங்களைச் செய்து; அரிதின் பெற்ற - அருமையாகப் பெற்றெடுத்த; உன் சிங்க ஏறு அகன்றது” - உன்னுடைய ஆண்சிங்கம் காடு சென்றுவிட்டது; என்று -; உணர்த்த - சொல்ல; செல்கெனோ? - செல்லக் கடவேனோ; இனி -; எங்கள் கோமகற்கு - தசரதனுக்கு; என்னின் - என்னைக்காட்டிலும்; கடைமுறை - இறுதியாகப் பார்க்குமிடத்து; கேகயன் நங்கையே - கைகேயியே; நல்லள் போலும் - நல்லவளாவாள் போலும்.
என்னைவிடக் கைகேயி நல்லவள் என்றான்! கைகேயி வார்த்தை கேட்டும் உயிரோடு இருந்த தசரதன் என் வார்த்தை கேட்டவுடனேயே உயிரை விடுவான் என்று சுமந்திரன் வருந்தினன். ஆல் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Shall I go to tell him, "The young lion you won so hard,
- by performing sacrifices over the fire, has gone away"?
- Then, to our king, compared with me,
- the Kēkaya princess herself will in the end seem kind.'
What the poem says
Tacarataṉ had his sons only after great sacrifices, the horse sacrifice and the rite for obtaining sons. Must Cumantiraṉ now tell him that his lion of a son is gone? The king survived Kaikēyi's words, but these words will kill him, so in the end Kaikēyi will look kinder to the king than Cumantiraṉ.