கம்பராமாயணம் 1942 · அயோத்தியா 5.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முடிவு உற - தன் கருத்து (இராமனை மீள அழைத்துச் சேறலே என்பது) முடிவாகத் தெரியும்படி; இன்னன - இந்த வார்த்தைகளை; மொழிந்த பின்னரும் - சொல்லிய பிறகும்; இடி உற - இடி ஒலி கேட்டு; அழுங்கு பேர் அரா - மனம் வருந்தும் பெரும்பாம்பு; துவளுவது - துடித்துச் சோர்கின்றது; என்னும் - என்று சொல்லத்தக்க; இன்னலன் - துன்பம் உடையவனாய், அடி உறத் தழுவினன் - இராமனது கால்களை நன்கு பற்றிக்கொண்டு; பலவும் பன்னினான் - பல வார்த்தைகளையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு; படிமிசைப் புரண்டனன் - பூமியில் விழுந்து புரண்டான்.
இராமன் திரும்பி வருபவனாகத் தோன்ற வில்லை யாதலின் சுமந்திரன் படபட பன்னுதல் - ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even after he had said all these things to the end,
- in anguish like a great serpent that writhes and goes limp
- when thunder strikes, he clasped Irāmaṉ's feet tight,
- rolled on the ground, and said many things over and over.
What the poem says
When he has said all this, Cumantiraṉ, writhing like a great snake struck by thunder, which in Tamil poetry is a snake's terror, grabs Irāmaṉ's feet and rolls on the ground. He keeps repeating his pleas, because Irāmaṉ shows no sign of coming back.