கம்பராமாயணம் 1944 · அயோத்தியா 5.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“பிறத்தல் ஒன்று உற்ற பின் - இவ்வுலகில் பிறந்தாயிற்று என்ற பிறகு; பெறுவ யாவையும் - நேரக்கடவ இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும், திறத்துளி - அவ்வவற்றின் கூறுபாட்டோடே; உணர்வது ஓர் - அறிகின்றதாகிய ஒப்பற்ற; செம்மை உள்ளத்தாய்! - நேர்மையான மனம் உடைய சுமந்திரனே; அவலம் உண்டெனா - துன்பம் உண்டாகின்றதே என்று கருதி; புறத்து உறு பெரும்பழி - உலகரால் சொல்லப்படும் பெரிய பழியை; பொது இன்று எய்தலும் - சிறப்பாக அடைதலையும் (உணராது); அறத்தினை மறத்தியோ?” - தருமத்தினை மறந்தாயோ? '
துன்பத்திற்குப் பயந்து தருமத்தை மறக்கலாமோ? தருமத்தை மறந்தால் பழி வந்து சேரும் அல்லவா? உலகத்தில் பிறந்த பிறகு இன்ப துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற வேண்டுமே அன்றித் துன்பத்திற்குப் பயந்து அறத்தை மறத்தல் கூடாது என்றான். உள்ளி - உளி - தொகுத்தல் விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You of upright heart, who understand, each in its kind,
- all that comes to one once one has been born:
- will you forget dharma because there is sorrow,
- though the great blame of the world falls on you, and on you alone?'
What the poem says
Irāmaṉ appeals to Cumantiraṉ's wisdom. Anyone born into this world must expect both joy and sorrow, and a wise man understands that. Should he abandon what is right just because it hurts, and bring down on himself the world's blame for it?