கம்பராமாயணம் 1947 · அயோத்தியா 5.30

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கான் புறம் சேறலில் அருமை காண்டல் ஆல் ,
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் ,
யான் பிறந்து அறத்தினின்று இழுக்கிற்று என்ப ; ஓ
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் !

பொருள் · Meaning in Tamil

“ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்! - (பகைவரது) உடலைத் திறந்து உயிரைக் குடித்துத் திரியும் வேலை உடையவனே; கான் புறம் சேறலில் அருமை காண்டலால் - காட்டின் புறத்தே செல்லுதலால் உண்டாகும் அருமையை (துன்பத்தை) நினைத்து (நான்) திரும்புதலால்; வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் - வானளாவிய புகழ் பெற்ற மன்னர்களாற் சிறந்த பழைமையான நம் குலம்; யான் பிறந்து அறத்தினின்று இழுக்கிற்று - யான் பிறந்த படியால் அறத்திலிருந்து தவறியது; என்னவோ?” - என்று எல்லாராலும் சொல்லப்படவோ. '

வனவாசத்தின் அருமை கருதித் திரும்பினால் பழி வரும், புகழ் கெடும் என்றானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Because I shrank from the hardship of going into the forest,
  2. should it be said that the ancient line of kings whose fame rises to the sky
  3. slipped from dharma because I was born in it —
  4. you whose spear roams about, opening flesh and drinking lives?'

What the poem says

Irāmaṉ asks whether he should turn back because the forest is hard, so that people say the ancient, illustrious royal line fell from righteousness the moment he was born into it. He addresses the minister by his spear, as one warrior to another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṉpuṟam cēṟalil arumai kāṇṭalāl,
vāṉ piṟaṅkiya pukaḻ maṉṉar tol kulam,
yāṉ piṟantu aṟattiṉiṉṟu iḻukkiṟṟu eṉṉavō;
ūṉ tiṟantu uyir kuṭittu uḻalum vēliṉāy!